பீட்ரூட்டில் உள்ள பொட்டாசியம், வைட்டமின் சி போன்ற சத்துக்கள் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கின்றது. பீட்ரூட்டை பச்சையாகவும் சிறியளவில் தினமும் சாப்பிடலாம். இப்படி சாப்பிடும் போது, இரத்த சோகை போன்றவற்றை கையாள பயனுள்ளதாக இருக்கும். பீட்ரூட்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் கிட்னியில் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம். இதிலுள்ள ஆண்டி ஆக்ஸிடன்கள் இதயத்தை பலமாக்கி மாரடைப்பை தடுக்கிறது.