மாவட்ட அளவிலான கோகோ போட்டி -ஆர்வமுடன் மாணவர்கள் பங்கேற்பு !

59பார்த்தது
மாவட்ட அளவிலான கோகோ போட்டி -ஆர்வமுடன் மாணவர்கள் பங்கேற்பு !
கோவை இரத்தினபுரி கோ கோ கிளப் சார்பாக மாவட்ட அளவிலான கோ கோ போட்டி, கவுண்டர் மில் பகுதியில் உள்ள புனித ஜான் போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. போட்டி துவக்க விழாவில், சிறப்பு விருந்தினராக சென்ட்ரல் எக்சைஸ் மற்றும் ஜிஎஸ்டி சூப்ரிடெண்ட் ஸ்னேகா பிரின்ஸி கலந்து கொண்டு போட்டியைத் துவக்கி வைத்தார்.

கவுரவ அழைப்பாளராக புனித ஜான் போஸ்கோ பள்ளியின் முதல்வர் மற்றும் தாளாளர் ஆயர் பிச்சை ராபர்ட் கலந்து கொண்டார். 14 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் மாணவர்கள் மற்றும் மாணவிகள் என தனித்தனி பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்ற அணிகள் மற்றும் சிறந்து விளையாடிய மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி