கோவையில் மாவட்ட அளவிலான ஓபன் ரோலர் நெட்டேட் பால் போட்டி

58பார்த்தது
கோவையில் முதல் முறையாக கோவை மாவட்ட அளவிலான ஓபன் ரோலர் நெட்டேட் பால் போட்டி நடைபெற்றது.

கோவை மாவட்ட அளவில் முதலாவது ஒபன் ரோலர் நெட்டேட் பால் சேம்பியன்சிப் போட்டி கோவை வீரியம்பாளையம் பகுதியில் குணா ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் மைதானத்தில் நடைப்பெற்றது. இப்போட்டியானது கோவை மாவட்ட ரோலர் நெட்டேட் பால் அசோசியேசன் செயலாளர் நந்தகுமார் மற்றும் தலைவர் விஜயராகவன் தலைமையில் நடைப்பெற்றது.

இது குறித்து, கோவை மாவட்ட ரோலர் நெட்டேட் பால் அசோசியேசன் செயலாளர் நந்தகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், கோவை மாவட்ட அளவில் நடைப்பெறும் ரோலர் நெட்டேட் பால் போட்டியானது மினி சப் ஜூனியர், ஜூனியர், சீனியர் பிரிவு என பல்வேறு பிரிவுகளில் நடத்த பட்டது மொத்தம் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,
மாணவிகள் கலந்து கொண்டனர் என்றும். மேலும் ஸ்டார் சிறப்பு பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள், சான்றிதழ் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் இந்த மாதம் கோவையில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவித்தார்.

இதில் தலைவர் விஜயராகவன், பயிற்சியாளர் கிஷோர், சிண்டோ, பிரவின், சுகேஷ், பாலாஜி மற்றும் ப்ரியதர்ஷிணி, வசந்தகுமார், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் என ஏராளமனோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி