கோவை: பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

69பார்த்தது
கோவை, கருமத்தம்பட்டியில் தமிழக வெற்றிக் கழகம் கோவை புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் பாபு தலைமையில், பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை கண்டு கொள்ளாமல் இருக்கும் தமிழக அரசைக் கண்டித்து, மகளிர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கோவை - கருமத்தம்பட்டி தேசிய நெடுஞ்சாலை நால் ரோட்டில் நேற்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பெண்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் 250 க்கும் மேற்பட்ட மகளிர் மற்றும் தமிழக வெற்றி கழகத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி