அக்ரி இன்டெக்ஸ் வேளாண் கண்காட்சி வரும் 11"ம் தேதி துவக்கம்

68பார்த்தது
அக்ரி இன்டெக்ஸ் வேளாண் கண்காட்சி வரும் 11"ம் தேதி துவக்கம்
கோவை கொடிசியா தொழிற் கூட கண்காட்சி வளாகத்தில் "அக்ரி இன்டெக்ஸ் 2024" என்ற தலைப்பில் 22"ஆம் ஆண்டு வேளாண் கண்காட்சி சர்வதேச அளவில் நடைபெற உள்ளது இதற்காக கோவை கொடிசியா வளாகம் முழுவதும் அரங்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இது குறித்த செய்தியாளர் சந்திப்பு கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது அப்போது அவர்கள் செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், 22"ஆவது ஆண்டு ஒருங்கிணைந்த வேளாண் கண்காட்சி ஆனது கோவை கொடிசியா தொழில் கூட கண்காட்சி வளாகத்தில் வரும் 11"ம் தேதி துவங்கி 15"ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது.

வழக்கமாக நான்கு நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சி இந்த ஆண்டு ஐந்து நாட்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது இதற்கு முக்கிய காரணம் நான்க நாட்கள் போதிய அளவில் இல்லை என்று பலரும் கருத்து தெரிவித்த நிலையில் அந்த கருத்தின் அடிப்படையில் ஐந்து நாட்களாக அக்ரி இன்டெக்ஸ் கண்காட்சி நடைபெற உள்ளது. இதற்காக 498 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கண்காட்சியில் கலந்து கொண்டு வேளாண் துறை சம்பந்தமான அனைத்து விளக்கங்களையும் வாங்கி தொழில் நுட்பங்களையும் கண்காட்சிக்கு வைக்க உள்ளனர் சுமார் ஒன்னரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த கண்காட்சியில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பாக உள்ளது என இவ்வாறு தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி