மன்னார்குடியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் குடும்பத்துடன் திருவண்ணாமலை சென்றுவிட்டு இன்று (டிச. 23) சொந்த ஊருக்கு காரில் திரும்பி கொண்டிருந்தார். அதிகாலையில் அவரின் கார் காளாஞ்சிமேடு சாலையோரத்தில் உள்ள மரத்தில் மோதி விபத்தில் சிக்கியது. இதில் ரவிச்சந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் 5 பேர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து போலீஸ் விசாரிக்கிறது.