விழுப்புரம்: லோகேஷ், விக்ரம், சூர்யா ஆகிய மூவரும் சகோதரர்கள் ஆவர். இவர்கள் நேற்று (டிச. 22) பக்கிங்காம் கால்வாயில் மீன் பிடித்த போது லோகேஷ் தவறி விழுந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில் அவரை காப்பாற்ற கால்வாயில் குதித்த மற்ற இருவரும் நீரில் மூழ்கினர். தீயணைப்பு துறையினர் மூவரையும் தேடும் பணியில் ஈடுபட்ட சூழலில் லோகேஷ் சடலமாக மீட்கப்பட்டுள்ளார், மற்ற இருவரையும் தேடும் பணி தொடர்கிறது.