கோவை: தேசிய பாதுகாப்பு படை சார்பில் கோவையில் தீவிரவாத தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. கோவை பீளமேடு டைடல் பார்க் வளாகத்தில் நடந்த இந்த ஒத்திகையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றனர். அவர்கள் கோவை மாநகரில் தீவிரவாத சம்பங்கள் ஏதேனும் நிகழ்ந்தால், அதனை கட்டுப்படுத்தி மக்களை மீட்பது எப்படி? , எவ்வாறு தாக்குவது உள்ளிட்ட ஒத்திகையை மேற்கொண்டனர்.
இந்த ஒத்திகை நிகழ்ச்சியில், டெல்லியில் இருந்து வந்த தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் கமாண்டர் மேஜர் சிங் தலைமையிலும், தமிழ்நாடு கமாண்டோ பாதுகாப்பு படையினர் எஸ்பி அருண் பாலகோபாலன் தலைமையிலும், கோவை மாநகர போலீசார் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையிலும் இந்த ஒத்திகையில் ஈடுபட்டனர். நேற்று மாலை துவங்கிய தீவிரவாத தடுப்பு ஒத்திகை நேற்று காலை வரை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.