நவீன ஆராய்ச்சிக் கல்வி கண்காட்சி

72பார்த்தது
நவீன ஆராய்ச்சிக் கல்வி கண்காட்சி
கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனம் மற்றும் அமெரிக்க பல்கலைக்கழகங்கள் இணைந்து நடத்திய நவீன ஆராய்ச்சிக் கல்வி கண்காட்சியில் 15க்கும் மேற்பட்ட அமெரிக்க பல்கலைக்கழகங்கள் பங்கேற்றது. ஒரு நாள் கல்விக் கண்காட்சியாக நடைபெற்ற இக்கண்காட்சியானது அவினாசிலங்கம் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இக்கண்காட்சியில் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள், விரிவான கல்வியின் புதிய ஆய்வுக் களங்களை மாணவர்களுக்கு விளக்கி எடுத்து கூறினர். இந்த கண்காட்சியில் கல்விசார் ஒத்துழைப்பு, அதிநவீன ஆராய்ச்சி ஊக்குவிப்பு, இரட்டைக்கல்வித் திட்டங்கள் வடிவமைப்பு, கல்வி மற்றும் ஆராய்ச்சி முயற்சிகளில் புதிய கூறுகளைக் கண்டறிவது போன்ற முக்கிய அம்சங்களை உரையாடல் செய்தனர். இதனை தொடர்ந்து கண்காட்சி குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு அவினாசிலிங்கம் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி