விவசாய விலை பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்க கோரி ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்தி டெல்லியில் போராடிவரும் விவசாயிகள் மீது ஒன்றிய அரசு நிகழ்த்தும் கொடூரமான தாக்குதல்களை கண்டித்தும், அவர்களது கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்தியும் இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின்(IAL) ஒருங்கிணைப்பில் அகில இந்திய வழக்குரைஞர்கள் சங்கம்(AILU), மக்கள் சிவில் உரிமைக் கழகம்(PUCL), சமூக நீதி வழக்குரைஞர்கள் சங்கம்(AUSJ) ஆகிய அமைப்புகள் இணைந்து இன்று 20. 02. 2024 செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணிக்கு கோயம்புத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.