ரூ.5,000 கோடி முதலீடு: தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

54பார்த்தது
ரூ.5,000 கோடி முதலீடு: தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ரூ.5,000 கோடி முதலீட்டில் 50,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், புதிய தொழிற்சாலையை கோத்தாரி ஃபுட்வேர் லிமிடெட் நிறுவனம் தமிழ்நாட்டில் தொடங்கவுள்ளது. 
கரூர், பெரம்பலூர் மாவட்டங்களில், தோல் அல்லாத காலணி உற்பத்தி திட்டங்கள் நிறுவுவதற்காக தமிழ்நாடு அரசுடன் இன்று (பிப்., 26) புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், நிறுவன உயர் அதிகாரிகள் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி