சவக்கிடங்கில் இருந்து ரத்தம் -அதிகாரிகளின் அலட்சியம்!

81பார்த்தது
சவக்கிடங்கில் இருந்து ரத்தம் -அதிகாரிகளின் அலட்சியம்!
கோவை அரசு மருத்துவமனையில் சவக்கிடங்கில் 30 உடல்களை பாதுகாக்க வசதி உள்ளது. விபத்தில் ஏற்படும் மரணம், தற்கொலை கொலை போன்ற உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அதன் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. தினமும் 15 முதல் 20 உடல்களுக்கு இங்கு பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. இந்நிலையில் பிரேத பரிசோதனை செய்யப்படும் உடலில் இருந்து வெளிவரும் ரத்தம் குழாய் மூலம் சாக்கடையில் விடப்படுகிறது. இந்நிலையில் ஏழாம் தேதி மூடப்பட்டு இருந்த சாக்கடைகளில் இருந்து ரத்தம் வெளியேறி ஆறாக ஓடியது. ஊழியர்கள் ப்ளீச்சிங் பவுடரை தூவியும் துர்நாற்றம் தாங்க முடியாமல் மக்கள் அவதியற்றனர். இந்நிலையில் இன்று கோவை அரசு மருத்துவமனை சவக்கிடங்கு ரத்தக்கறை படிந்த தண்ணீர் தொடர்பாக பொதுப் பணித்துறை மூலம் கடந்த 7 ம் தேதி நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்று பிரச்னை சரி செய்யப்பட்டது என
மருத்துவக் கல்லூரி முதல்வர் தகவல் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி