தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்

68பார்த்தது
தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மற்றும் பதவியேற்பு விழா

தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் புரூக் பீல்ட் சாலையில் உள்ள கோவை இந்திய மருத்துவ சங்க கட்டிடத்தில் இன்று நடைபெற்றது.

இந்த செயற்குழு கூட்டத்தைத் தொடர்ந்து, புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க மாநில அளவில் தேர்தல் நடைபெற்றது.
இத்தேர்தலில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநில தலைவராக மதுரை மாவட்டத்தை சேர்ந்த பேராசிரியர் மருத்துவர் செந்தில் பொறுப்பேற்றார். மாநில பொது செயலாளராக திண்டுக்கல் மாவட்டம் மருத்துவர் சீனிவாசன் அவர்களும், மாநில செயலாளர் DME wing ஆக தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் சந்திரசேகர் அவர்களும்,
மாநில செயலாளர் DMS WING ஆக தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் ஜெஸ்லின் அவர்களும்,
மாநில செயலாளர் DPH WING ஆக நாகப் பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் சுந்தர்ராஜன் அவர்களும் பொறுப்பேற்றனர்.

மேலும் மாநில பொருளாளராக திருவள்ளூர் மாவட்ட
மருத்துவர் பிரபுசங்கர் அவர்களும்
மாநில அவை தலைவராக கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் ரவிஷங்கர் அவர்களும் பொறுப்பேற்றனர்.

தொடர்புடைய செய்தி