பொள்ளாச்சி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை செய்து வருகிறது, இதனால் சோலையார், ஆழியார், பரம்பிக்குளம் ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வந்தது, இந்த நிலையில் ஆழியார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தால் இன்று அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது, இதைத்தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து 11 மதகுகள் வழியாக உபரி நீர் ஆழியார் ஆற்றில் திறந்து விடப்பட்டது, தண்ணீர் திறந்து விடுவதற்கு முன்பாக மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் வகையில் அபாய ஒலி எழுப்பப்பட்டது, அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டதையடுத்து அதிகாரிகள் மலர் தூவி வரவேற்றனர். ஆழியார் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஆழியார் ஆற்று கரையோர பகுதி வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.