24 மனை தெலுங்கு செட்டியார் பேரவை சார்பில் வருகிற ஆகஸ்ட் 16ஆம் தேதி சேலத்தில் எம். பி. சி. , உரிமை மீட்பு மாநாடு நடத்தப்படுகிறது, இதற்கான ஆலோசனைக் கூட்டம் பொள்ளாச்சி காமாட்சி அம்மன் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது, 24 மனை தெலுங்கு செட்டியார் பேரவை மாநில தலைவர் ஜெகநாத் மிஸ்ரா தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை பகுதி சேர்ந்த நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சேலத்தில் நடைபெறும் எம். பி. சி. உரிமை மீட்பு மாநாட்டை சிறப்பாக நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது, இதையடுத்து செய்தியாளரிடம் பேசிய 24 மணி தெலுங்கு சண்டியர் பேரவை மாநில தலைவர் ஜெகநாத் மிஸ்ரா சேலத்தில் நடைபெற உள்ள மாநாட்டிற்கு தமிழ்நாடு மட்டுமில்லாமல் ஆந்திரா, கர்நாடகா வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்ள உள்ளனர் என்றும், இதில் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும், சேலத்தில் நடைபெறும் மாநாடு 24 மனை தெலுங்கு செட்டியாருக்கு எம். பி. சி உரிமை மீட்பு மாநாடாக நடத்தப்படுவதாக பேட்டியின் போது தெரிவித்தார்.