கோவையில் சர்வதேச அளவிலான நடன விழா

52பார்த்தது
மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பாக, குளோபல் ஆர்ட்ஸ் அகாடமி ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நாடுகளில் நடன விழாக்களை நடத்துகிறது.
இந்த ஆண்டு 2024ம் ஆண்டு, குளோபல் ஆர்ட்ஸ் அகாடமி நடன விழா ஆக. 10, 11ம் தேதிகளில் கோவை நவ இந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலையரங்கத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து குளோபல் ஆர்ட்ஸ் அகாடமி யூகே இயக்குனர்கள் செல்லத்துரை பிரதீப் குமார், ஸ்ரீதேவி பிரசாத் ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

தொடர்புடைய செய்தி