ஸ்ரீ நாராயண குரு பாலிடெக்னிக் கல்லூரியில் சுதந்திர தின விழா

73பார்த்தது
கோவை மதுக்கரை சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ நாராயண குரு பாலிடெக்னிக் கல்லூரியில் இந்திய நாட்டின் 78வது சுதந்திர தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஸ்ரீ நாராயண குரு கல்வி அறக்கட்டளையின் பொருளாளர் சஜிஸ் குமார் கலந்துகொண்டு தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். கல்லூரி முதல்வர் உதயகுமார் வரவேற்புரை வழங்கினார். தொடர்ந்து அவர் மாணவர்களிடையே பேசுகையில், இந்தியா வல்லரசு நாடாக மாறி வருகிறது. இந்தியாவில் 40% இளைஞர்கள் உள்ளனர். மற்ற நாடுகள் நமது இளைஞர்களை சீரழிக்கும் விதமாக பல்வேறு நாச வேலைகளை செய்து வருகின்றனர். குறிப்பாக இளைஞர்களை போதை பழக்கத்திற்கு அடிமைப்படுத்தி வருகின்றனர். மேலும் செல்போன் மோகம் அதிக அளவிலும் பரப்பி வருகின்றனர். எனவே இளைஞர்கள் அதற்கு மாறாக செயல்பட வேண்டும் என வலியுறுத்தி பேசினார். தொடர்ந்து கல்லூரி மாணவர்களின் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவர் அமைப்புச் செயலாளர் சைமன் நன்றி உரையாற்றினார். இதில் கல்லூரியின் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கல்லூரியில் உடல் கல்வி ஆசிரியர் சதீஷ்குமார் செய்திருந்தார்.

தொடர்புடைய செய்தி