திஷா வாழ்வியல் பள்ளியில் நீச்சல் போட்டி

58பார்த்தது
பொள்ளாச்சி கோவை சாலையில் திஷா வாழ்வியல் பள்ளியில் ஐ. சி. எஸ். சி பள்ளிகளு இடையேயான மாநில அளவிலான நீச்சல் போட்டி கடந்த 27ம்தேதி நடைபெற்றது.

பாண்டிச்சேரி மற்றும் தமிழகத்திலிருந்து கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு, திருநெல்வேலி. சென்னை என பல்வேறு மாவட்டங்களில் இருந்து 32 பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்,
இந்த போட்டி 400 மீட்டர், 300 மீட்டர், 200 மீட்டர் அளவிலான, ஆண், பெண் இருபாலனருக்கு தனி தனியாக போட்டி நடைபெற்றது, பள்ளி மாணவ மாணவிகள் பட்டர் பிளை நீச்சல், முன் நீச்சல், பின் நீச்சல், நேராக நீச்சல் என பல்வேறு பிரிவுகளில் நடைபெற்றது. உற்சாகத்துடன் நீந்தி செல்லும் மாணவர்களை கண்டு பெற்றோர்கள் மற்றும் பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.
இதில் நேற்று நடைபெற்ற இறுதி சுற்று போட்டி கோவை, சென்னை, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்

இறுதி சுற்றில் தூத்துக்குடி விகாசா பள்ளி மாணவர்கள் 240 புள்ளிகள் எடுத்து ஆள் ஓவர் சாம்பியன்ஷிப் கோப்பையை தட்டிச் சென்றனர். மேலும் பல்வேறு பிரிவுகள் வெற்றி வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வெற்றி கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது‌.

தொடர்புடைய செய்தி