தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் சார்பாக ஆர்ப்பாட்டம்

62பார்த்தது
தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் சார்பாக கள்ளச்சாராயத்தை ஒழிப்போம் கள்ளு கடைகளை திறப்போம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் இன்று கோவையில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில், மாநில பொதுச் செயலாளர் கே சி ராஜா தலைமை தாங்கினார். கோவை மண்டல தலைவர் சுதர்சன் முன்னிலை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கள்ளச்சாராயம் மரணங்களை கட்டுப்படுத்த வேண்டும்.
சினிமாவில் வரும் புகை பிடிக்கும் காட்சிகளையும் மது அருந்தும் காட்சிகளையும் தடை செய்ய வேண்டும் வருங்கால இளைய தலைமுறையினர் அதை பார்த்து கெட்டுப் போகிறார்கள். மது போதையால் பாதிக்கப்படும் வணிகர்களுக்கு நஷ்ட ஈடாக போதை ஆசாமிகளிடமிருந்து பணம் வசூல் செய்து கடைக்காரர்களிடம் கொடுக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

ஆர்ப்பாட்டத்திற்கு, மண்டல செயலாளர் பாலகிருஷ்ணன், மண்டல ஒருங்கிணைப்பாளர் இடையார்காடு பாஸ்கர், மாநிலத் துணைத் தலைவர் வேல்முருகன், மாநிலச் செயலாளர் வேதநாயகம், மண்டல துணைத் தலைவர்
மணி, மண்டல இளைஞரணி தலைவர் விஜயகுமார், திருப்பூர் மாவட்ட தலைவர் ஆத்திச்செல்வன், கரூர் மண்டல தலைவர் முருகேசன் தலைமையில் மாவட்ட தலைவர் சக்திவேல், ஈரோடு மாநிலச் செயலாளர் சுரேஷ் குமார், கோவை கிழக்கு மாவட்ட தலைவர் அய்யனார், கோவை மேற்கு மாவட்ட செயலாளர் ராமசாமி உட்பட ஏராளமான வியாபார பெருமக்களும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி