டெல்லி மாநில சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியை கைப்பற்றியதை கொண்டாடும் வகையில் நேற்று (பிப்ரவரி 08) கோவை மாநகர் மாவட்ட பாஜக சார்பில் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், பாஜக மூத்த தலைவர் எச் ராஜா, கோவை மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் நந்தகுமார் மற்றும் மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாரதிய ஜனதா தலைநகரில் ஆட்சியை கைப்பற்றி இருப்பதாக கூறி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.