கோவை: மேம்பாலத்தில் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட வாகனங்கள்..

78பார்த்தது
கோவை, ராமநாதபுரம் பகுதி நகரின் மையப் பகுதியாக உள்ளது. இங்குள்ள ராமநாதபுரம் மேம்பாலத்தில் அடுத்தடுத்து சென்ற நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி நேற்று (பிப்.6) விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை. விபத்துக்கான காரணம் குறித்த போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், முன்னால் சென்ற மாருதி கார் திடீரென பிரேக் பிடித்ததால், பின்னால் வந்த வாகனங்கள் அடுத்தடுத்து மோதியது தெரியவந்துள்ளது. 

விபத்தில் மூன்றாவதாக பெருந்துறையில் இருந்து நோயாளியை கோவை அரசு மருத்துவமனைக்கு ஏற்றிக்கொண்டு வந்துகொண்டிருந்த ஆம்புலன்ஸும் விபத்தில் சிக்கியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை. முன்னால் சென்ற கார் எதற்காக திடீரென பிரேக் பிடித்து நிறுத்தப்பட்டது என்பது குறித்தான காரணங்கள் இதுவரை தெரியவரவில்லை, காரின் ஓட்டுனர் காரை நிறுத்திவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார். இதனால் அப்பகுதியில் தொடர்ந்து இருபது நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் அங்கு விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தினர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்திருக்கும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி