கோவை: ஸ்ட்ரக்சர்களை கட்டிடப் பணிகளுக்கு பயன்படுத்தும் அவலம்

71பார்த்தது
கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளை அவசர காலத்தில் அழைத்துச் செல்ல பயன்படும் ஸ்ட்ரெச்சர்கள் மற்றும் சக்கர நாற்காலிகளை கட்டிட வேலைகளுக்கு பயன்படுத்தும் தனியார் நிறுவன ஊழியர்களின் வீடியோ நேற்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை அரசு மருத்துவமனைக்கு கோவை மட்டுமின்றி நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். இங்கு 2000-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனைக்கு நோயாளிகளை அழைத்துச் செல்ல சக்கர நாற்காலிகள் மற்றும் ஸ்ட்ரெச்சர்கள் உள்ளன. 

ஆனால், தனியார் நிறுவனம் ஒன்றைச் சேர்ந்த ஊழியர்கள் இந்த ஸ்ட்ரெச்சர்களை நோயாளிகளுக்குப் பதிலாக கட்டிடக் கழிவுகளை எடுத்துச் செல்ல பயன்படுத்துவது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இதற்கு முன்பும் இதே மருத்துவமனையில் நோயாளியை கையில் தூக்கிச் சென்ற சம்பவமும், ஸ்ட்ரெச்சர்களில் மருத்துவக் கழிவுகளை எடுத்துச் சென்ற சம்பவமும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி