கோவையில் கடந்த 14-ஆம் தேதி குண்டுவெடிப்பு நினைவுநாள் நிகழ்ச்சியில் பேசிய காடேஸ்வரா சுப்பிரமணியம் மீது, இரு மதத்தவர் இடையே பிரிவினையை தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு பதிவு செய்து நேரில் ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது, அதன்படி நேற்று மாலை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்திற்கு வந்த அவர், செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், "இன்று நடக்கக்கூடிய அரசாங்கமானது இந்துக்களுக்கு விரோதமாக நடந்துகொண்டு இருக்கிறது. இந்த அரசாங்கத்திற்கு ஏழரைசனி பிடித்திருக்கிறது.
2026-ல் இந்த ஏழரைசனி என்ன என்பதை காட்டும். கடந்த 24-ஆம் தேதி கூட பெரியார் திராவிட கழகத்தினர் நாமம் போட்டு ஒரு ஆர்ப்பாட்டம் செய்தனர். அதற்கு புகார் கொடுத்தும் சி.எஸ்.ஆர் காப்பி கூட கொடுக்கவில்லை. இந்து முன்னணி அலுவலகத்தின் மீது வெடிகுண்டு வீசியிருக்கிறார்கள். அதற்கும் புகார் கொடுத்திருக்கிறோம். அதன் மீதும் தற்போது வரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. துடியலூர் முத்துச்சாமி கவுண்டர் வீதியில் வெள்ளிக்கிழமை தோறும் பங்களாதேஷ் முஸ்லிம்கள் மற்றும் மற்ற முஸ்லிம்கள் சேர்ந்து தொழுகை நடத்துகிறார்கள். பல முறை இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்திருக்கிறோம், அதற்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்று கூறினார்.