மேட்டுப்பாளையத்தில் மஹாளய அமாவாசைக்கு ஏற்பாடுகள் தீவிரம்

51பார்த்தது
மேட்டுப்பாளையத்தில் மஹாளய அமாவாசைக்கு ஏற்பாடுகள் தீவிரம்
மேட்டுப்பாளையத்தில் உள்ள அனைத்து இந்து சமுதாய நந்தவனத்தில் மஹாளய அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் தர்ப்பணம் கொடுக்க வருகை தருவார்கள் என்பதால் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஆண்டுக்கு ஒரு முறை வரக்கூடிய மஹாளய அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் அவர்களது ஆசை மற்றும் ஆன்மா சாந்தி அடையும் என நம்பப்படுவதால் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ள அனைத்து இந்து சமுதாய நந்தவனத்தில் நாளை மஹாளய அமாவாசையை ஒட்டி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வருகை புரிவார்கள் என்பதால் அனைத்து இந்து சமுதாய நந்தவன நிர்வாகம் சார்பில் கூட்ட நெரிசலை தவிர்க்க முன்னேற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது.

ஒரே நேரத்தில் கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 30, 000 முதல் 40, 000 பொதுமக்கள் வரை தர்ப்பணம் கொடுக்க வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தடுப்பு வேலைகள் அமைக்கப்பட்டு வரிசைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

வருகின்ற பக்தர்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் அனைத்தும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அனைத்து இந்து சமுதாய நந்தவனத்தின் தலைவர் என். எஸ். வி. ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி