கோவையில் காதம்பரி 2024 இசைக்கச்சேரி விழா

78பார்த்தது
கோவை பி. எஸ். ஜி. அண்ட் சன்ஸ் அறக்கட்டளை சார்பில் காதம்பரி 2024 இசைக்கச்சேரி விழா

பி. எஸ். ஜி. அண்ட் சன்ஸ் அறக்கட்டளை சார்பாக, ஒவ்வொரு ஆண்டும் வளர்ந்து வரும் இசைக்கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் காதம்பரி எனும் இசை நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டிற்கான காதம்பரி கலை நிகழ்ச்சி விழா வரும் ஜன. 4 ம் தேதி துவங்கி 7ம் தேதி வரை நடைபெற உள்ளது. பி. எஸ். ஜி. மருத்துவமனை வளாகத்தில் உள்ள பி. எஸ். ஜி மருத்துவமனை கலையரங்கத்தில் நடைபெறுகிறது. இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இதில் பி. எஸ். ஜி. பல்நோக்கு மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் புவனேஸ்வரன், பி. எஸ். ஜி கலை அறிவியல் கல்லூரியின் கர்நாடக இசை துறை தலைவர் முனைவர் விஜய ஜெயா, பி. எஸ். ஜி சமுதாய வானொலி சந்தரசேகரன்,
பி. எஸ். ஜி தொழில்நுட்பக் கல்லூரி ஆங்கிலத் துறையின் இணை பேராசிரியர் சுரேஷ்
ஊடக தொடர்பு மேலாளர் உமா செங்கதிர் ஆகியோர் பேசினர்.

டேக்ஸ் :