21-வது சிஆர்ஐ பம்ப்ஸ் மகளிர் கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் கோவை வஉசி விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இன்று மாலை நடைபெற்ற இறுதிப் போட்டியில் செக்கந்திராபாத் - தென் மத்திய இரயில்வே அணியை எதிர்த்து சென்னை - தென்னக இரயில்வே அணி விளையாடியது. இதில் தென் மத்திய இரயில்வே அணி 71 - 68 என்ற புள்ளி கணக்கில் வென்று கோப்பையை கைப்பற்றியது.