கோவை: தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி

77பார்த்தது
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேர்தலில் 100% வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் சர்மிளா நேற்று (ஜனவரி 25) தொடங்கி வைத்தார். 

இந்தப் பேரணியில் 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு வாக்களிப்பது குறித்து கையில் பதாகைகள் ஏந்தி ஊர்வலமாக சென்றனர். அதனை தொடர்ந்து கோலப் போட்டிகள், சிலம்பாட்டம், ஒயிலாட்டம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலக வாகனத்தில் வீடியோ வாயிலாக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர். 

கோவை நல்லாம்பாளையம் சிகரம் கலைக்குழு சார்பாக ஒயிலாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு ஒயிலாட்டம் ஆடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

தொடர்புடைய செய்தி