வடவள்ளி பகுதியில் அமைந்துள்ள மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் ஹிந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று (ஜன.27) மாலை ஆய்வு செய்தார்.
மருதமலையில் அமைக்கப்பட்டு வரும் லிப்ட் பணிகள் ஏப்ரல் இறுதி அல்லது மே மாதத்தில் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும் மருதமலை அடிவாரத்தில் முருகன் சிலை அமைப்பதற்கான இடங்களை ஆய்வு செய்ததாகவும். வருகிற ஏப்ரல் நான்காம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்றும். கும்பாபிஷேகம் தமிழ் மொழியில் நடத்தப்படும் என்று கூறினார்.
இதில் முதன்மை செயலாளர் சந்திரமோகன், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திக்குமார் பாடி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.