கோவை: சாலையில் பீர் பாட்டிலுடன் ரகளையில் ஈடுபட்ட 3 பேர் கைது

84பார்த்தது
கோவை, 100 அடி சாலையில் இருந்து நவஇந்தியா நோக்கி செல்லும் மேம்பாலத்தில் நேற்று நள்ளிரவு ஒரே இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பீர் பாட்டில்களுடன் சென்றனர். அவர்கள் எதிரே வாகனங்களில் வந்தவர்களை மிரட்டியபடி அச்சுறுத்தும் வகையிலும் சென்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதை அறிந்த காட்டூர் காவல் துறையினர் தீவிர தேர்தல் வேட்டை நடத்தினர். இந்நிலையில் நேற்று மேம்பாலத்தில் ரகளையில் ஈடுபட்ட ராஜ்குமார், சுசீந்திரன் மற்றும் கௌதம் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி