கோவை வ. உ. சி மைதானத்தில் வி. ஜி. எம் மருத்துவமனை மற்றும் கோவை அத்லெட்டிக் கிளப் இணைந்து ரன் ஃபார் நேசன் மாரத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த மாரத்தான் நிகழ்ச்சியில் திமுக வி. ஜி. எம் மருத்துவமனை தலைவர் டாக்டர் மோகன் பிரசாத், கோவை அத்லெடிக் கிளப் புரவளரும் விஜிஎம் மருத்துவமனை மருத்துவர் சுமன், திமுக மாநகர் மாவட்ட செயலாளர் நா. கார்த்திக், மார்ட்டின் குழுமம் லீமா ரோஸ் , கோவை அத்லெடிக் கிளப் செயலாளர் சீனிவாசன், ஆகியோர் துவக்கி வைத்தனர்.
மாரத்தான் போட்டிகளில் பல்வேறு கல்லூரி மாணவ மாணவியர்கள், தொழில்நிறுவன அலுவலர்கள், அரசு அலுவலர்கள், அரசு பள்ளி மாணவர்கள் உட்பட 3700க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த மாரத்தான் நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீல்சேர் ஓட்டம் மற்றும் ஆண்கள் , பெண்கள் மாணவ மாணவியர்கள் 10, 5, 3, கிலோமீட்டர் என போட்டிகள் நடைபெற்றன.