மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

51பார்த்தது
மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் புதிய நுழைவாயில் - விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்ப்பு

கோவை, கோபாலபுரம் பகுதியில் நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், ரயில் நிலையம் போன்ற முக்கிய அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.

நாள்தோறும் ஆயிரக் கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல், கூட்ட நெரிசல் அவ்வப்போது ஏற்பட்டு வந்தது. மேலும் ஒரே ஒரு நுழைவாயில் மட்டும் இருந்து வந்தது.

இதனால் பொதுமக்களும், அலுவலக ஊழியர்களும் அவதி அடைந்து வந்தனர். இதனை கருத்தில் கொண்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய நுழைவாயில் ஒன்று அமைக்கப்பட்டது. அந்த நுழைவாயில் பணிகள் நிறைவடைந்து திறப்பு விழாவிற்காக காத்துக் கிடந்த நிலையில்.

இன்று அந்த நுழைவாயில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அனைவரது கண்களை கவர்ந்து உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி