பற்கள் ஆரோக்கியத்திற்கு ஒரு நாளைக்கு 2 முறை பல் துலக்குவது அவசியம். இது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால், எத்தனை நாட்களுக்குப் பிறகு டூத் பிரஷை மாற்ற வேண்டும் என்பது பலருக்கும் தெரியாது. நிபுணர்கள் கூற்றுப்படி, டூத் பிரஷை 3 அல்லது 4 மாதங்களுக்கு பிறகு கண்டிப்பாக மாற்ற வேண்டும். மேலும், உங்களுக்கு சளி, இருமல், காய்ச்சல், வாய் பூஞ்சை போன்ற நோய் இருந்தால், உடனே டூத் பிரஷ்ஸை மாற்றி விடுங்கள். இல்லையெனில், தொடர்ந்து நோய்வாய்ப்பட வாய்ப்புள்ளது.