சிகரெட் புகை, மூச்சு திணறிய குழந்தை.. வீடியோவால் பரபரப்பு

73பார்த்தது
இளம்பெண் ஒருவர், பாட்டு படித்தபடி, சிகரெட் புகைக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதில், மக்களுக்கு ஆத்திரம் ஏற்படுத்திய விசயம் என்னவென்றால், அந்த இளம்பெண் கையில் குழந்தையுடன் வீடியோவில் காணப்படுகிறார். அந்த குழந்தைக்கு சிகரெட் புகையின் நெடியால் சற்று மூச்சு திணறி, இருமல் ஏற்படுகிறது. அப்போதும், வீடியோ எடுக்கும் ஆர்வத்தில், அழகாக தெரிய வேண்டும் என்ற நோக்கத்தில், புன்னகைத்தபடி அந்த இளம்பெண் காட்சி தருகிறார். இந்த வீடியோவை, சமூக ஆர்வலர் மற்றும் பத்திரிகையாளரான தீபிகா நாராயண் பரத்வாஜ் என்பவர் பகிர்ந்து உள்ளார். அந்த பதிவில், அரக்கர்களிடம் குழந்தைகள் சிக்கி கொண்டுள்ளனர். அது பயங்கர உணர்வை ஏற்படுத்துகிறது என்று தெரிவித்து உள்ளார்.

தொடர்புடைய செய்தி