சீன பொருட்கள் மீதான வரிவிதிப்புக்கு பதிலடியாக, அமெரிக்கா ஏற்றுமதி செய்யும் சோயா பீன்ஸ், மக்காச்சோளம், பால் பொருட்கள், மாட்டிறைச்சி உள்ளிட்ட பொருட்களுக்கு 10-15% வரை கூடுதல் வரி விதிக்கப்படும் என சீன நிதியமைச்சகம் தெரிவத்துள்ளது. மேலும், வரிப் போராக இருந்தாலும் சரி, வர்த்தகப் போராக இருந்தாலும் சரி அல்லது வேறு எந்த வகையான போராக இருந்தாலும் சரி, அமெரிக்காவுடன் இறுதிவரை போரிட சீனா தயாராக இருக்கிறது என கூறியுள்ளது.