சென்னை கொடுங்கையூர், எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையைச் சேர்ந்தவர் இதிஸ் முகமது(28). இவர், கடந்த ஐந்து ஆண்டுகளாக, தன் வீட்டின் தரை தளத்தில், பி. என். பர்மா ஹார்டுவேர்ஸ் என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு, செப். , 13ஆம் தேதி, 21 வயது மதிக்கத்தக்க பெண் குடிபோதையில் வந்துள்ளார்.
அப்போது, தன் கணவர் ரபிக் என்பவர் ஜெயிலில் இருப்பதாகவும், அவரை 'ஜாமினில்' எடுக்க பணம் வேண்டுமெனவும் கேட்டு, கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளார். மேலும், தொடர்ந்து அடிக்கடி கடைக்கு வந்து, பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
கொடுங்கையூர் போலீசார் விசாரணையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டது கொடுங்கையூர், காந்தி நகர் ஆறாவது தெருவைச் சேர்ந்த மோனிகா(21). என்பது தெரியவந்தது. இதையடுத்து நேற்று, மோனிகாவை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இவர் மீது அண்ணாசதுக்கம், கொடுங்கையூர் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.