சென்னை: ரூ. 20 லட்சம் பணம் பறிமுதல்: போலீசார் விசாரணை

71பார்த்தது
சென்னை: ரூ. 20 லட்சம் பணம் பறிமுதல்: போலீசார் விசாரணை
பிராட்வே, என். எஸ். சி. போஸ் சாலையில், வடக்கு கடற்கரை போலீசார் நேற்று முன்தினம் (செப்டம்பர் 29) நள்ளிரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பைக்கில் வந்த புதுப்பேட்டையைச் சேர்ந்த வினோத், (30), என்பவரிடம் விசாரித்தனர். அவர், முன்னுக்குபின் முரணாக பதிலளிக்கவே, பையை சோதனை செய்தனர். இதில், கட்டு கட்டாக 10 லட்சம் ரூபாய் இருந்தது. தொடர் விசாரணையில், பணப் பரிமாற்றம் செய்யும் நிறுவனத்தில் வினோத் பணிபுரிந்து வருவது தெரியவந்தது.

அதேபோல், கொத்தவால்சாவடியில் போலீசார் நேற்று முன்தினம் (செப் 29) நள்ளிரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பைக்கில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த கணேசன், 35, என்பவரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில், 10 லட்ச ரூபாய் சிக்கியது. உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால், இருவரிடமும் பறிமுதல் செய்யப்பட்ட தலா 10 லட்சம் ரூபாயை, நுங்கம்பாக்கம் வருமானவரித்துறை அதிகாரியிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி