பொங்கல் பண்டிகை: முன்பதிவு பெரும்பாலும் நிரம்பின..!

59பார்த்தது
பொங்கல் பண்டிகை: முன்பதிவு பெரும்பாலும் நிரம்பின..!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர் செல்வதற்கான அரசு பேருந்துகளில் பெரும்பாலான இருக்கைகள் நிரம்பிய நிலையில், ஆம்னி பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டதால் பயணிகள் தவித்து வருகின்றனர்.

சென்னை, கோவை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் கல்வி, பணி, தொழில் காரணமாக வசிக்கும் பலரும்பண்டிகை, தொடர் விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்குச் செல்வது வழக்கம். அந்த வகையில், பொங்கல்பண்டிகை ஜன. 15-ம் தேதி (திங்கள்)கொண்டாடப்படுகிறது. அரசு ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் 12-ம் தேதியே (வெள்ளி) புறப்படுவார்கள்


ஆனால், அரசு பேருந்துகளில் பெரும்பாலான இருக்கைகள் தற்போதே நிரம்பி விட்டன. குறிப்பாகசென்னையில் இருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் 20 பேருந்துகளில்இருக்கைகள் நிரம்பிவிட்டன. இந்நிலையில், ஆம்னி பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட அதிகமாக இருப்பதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி