மு. க. ஸ்டாலின் சாதிவாரி கணக்கெடுப்பிற்கு எதிரானவர் இல்லை என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என எம்எல்ஏ ஜி. கே. மணி பேரவையில் வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த அமைச்சர், இட ஒதுக்கீட்டுக்கு திமுக எதிரி இல்லை. மற்ற மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு எந்த முன்னேற்றமும் இல்லை என்பதால் அதுபற்றி இதுவரை சிந்திக்கவில்லை என்றார்.