தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட பாதிப்பு, நிவாரண நிதி உள்ளிட்ட விவகாரம் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகை மற்றும் பொங்கல் பரிசு தொகை குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது