சென்னை விமான நிலையத்தில் நாள் ஒன்றுக்கு 300க்கும் மேற்பட்ட விமானங்கள் வந்து செல்கிறது. நாட்டின் முக்கிய விமான நிலையங்களில் ஒன்றான இங்கு வந்து செல்லும் பயணிகள் விமான நிலைய நுழைவு வாயிலில், அதாவது உள்நாடு மற்றும் சர்வதேச முனையங்களில் வருகை தரும் பயணிகளை கூப்பிட்டு செல்வதற்கும் வழியணுப்புவதற்கும் தினமும் அதிகமானோர் வந்து செல்கின்றனர்.
விமான நிலைய வளாகத்துக்குள் பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த 8 ஆண்டுகளாக ஆட்டோக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வாகன நிறுத்தமிடங்களை பராமரிக்கும் ஊழியர்கள் போலீஸ் என நடத்தி வாகனங்களை நிறுத்தக்கூடாது எனவும் வாகன நிறுத்துமிடத்துக்கு வருவோரின் பைக் சாவியை பறித்துக்கொண்டு அபராதம் செலுத்த நிர்பந்திப்பதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.
மல்டி லெவல் பார்க்கிங்கை ஒப்பந்தம் எடுத்துள்ள தனியார் நிறுவனம் கட்டுப்பாட்டில் விமான நிலைய நிர்வாகம் உள்ளதாகவும் தனியார் நிறுவனம் விதிக்கும் நிபந்தனைகளை விமான நிலையம் நிர்வாகம் ஏற்றுக் கொள்கிறது என பயணிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
2022 முதல் மல்டி லெவல் கார் பார்க்கிங் அமலுக்கு வந்ததில் இருந்து இருசக்கர வகணங்களுக்கு தடை உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இருசக்கர வாகனங்களால் விமான நிலைய வளாகத்துக்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.