ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி கேட்டு போராட்டம்

59பார்த்தது
தமிழக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கேட்டு அவருடைய மனைவி பொற்கொடி தனது குழந்தையுடன் விழா மேடைக்கு வந்து போராட்டம் நடத்தினார். இந்த போராட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சியினரும் ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர். இதில் பகுஜன் சமாஜ் கட்சியினரும் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.

ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியும் அவருடைய குழந்தையும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி வேண்டும் என பொரிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தி இருந்தனர். மேலும் பொற்கொடி பகுஜன் சமாஜ் கட்சியினரும் ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்களும் கண்ணீர் மல்க ஆறுதல் தெரிவித்தனர்.

ஒரு கட்டத்தில் பொற்கொடி துக்கம் தாளாமல் அழுதுவிட்டார். அவரை பார்த்து குழந்தையும் அழத் தொடங்கியது. ஏற்கெனவே குழந்தை அப்பா அப்பா என கேட்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நீதி வேண்டும் நீதி வேண்டும், படுகொலைக்கு நீதி வேண்டும் என கோஷமிட்ட போது பொற்கொடியும் அவருடைய குழந்தையும் விழா மேடைக்கு வந்தனர்.

தொடர்புடைய செய்தி