புதுச்சேரி மாணவியை எம்பிபிஎஸ் கலந்தாய்வில் அனுமதிக்க உத்தரவு

80பார்த்தது
புதுச்சேரி மாணவியை எம்பிபிஎஸ் கலந்தாய்வில் அனுமதிக்க உத்தரவு
புதுச்சேரியில் பல் மருத்துவ படிப்பில் சேர்க்கை வழங்கப்பட்டுள்ள மாணவிக்கு, எம்பிபிஎஸ் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டுமென புதுச்சேரி மாநில சென்டாக் குழுவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் புதுச்சேரி வில்லியனூரைச் சேர்ந்த பட்டியலின மாணவி ஸ்ரீநிஷா தொடர்ந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த தனி நீதிபதி, மருத்துவ படிப்புகளுக்கான இடங்களுக்கு ஏற்கெனவே கலந்தாய்வு முடிந்து, தகுதிப்பட்டியல் தயார் செய்யப்பட்டுவிட்ட நிலையில் இந்த கோரிக்கையை ஏற்க முடியாது, எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஸ்ரீநிஷா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் டி. கிருஷ்ணகுமார், பி. பி. பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், மாணவி ஸ்ரீநிஷா தாமதமாக விண்ணப்பித்து இருந்தாலும் அவரது சாதி சான்று உள்ளிட்ட ஆவணங்களை பரிசீலித்து எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என புதுச்சேரி சென்டாக் குழுவுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

தொடர்புடைய செய்தி