என்னுடைய அப்பா அரசியல்வாதியல்ல. அதனால் நான் ஜெயிப்பதற்கு நேரமாகும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பா. ஜ. க மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்னையில் கட்சித் தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், என்னுடைய அப்பா அரசியல்வாதியல்ல. அதனால் நான் ஜெயிப்பதற்கு நேரமாகும். என் அப்பா கருணாநிதியாக இருந்திருந்தால் நானும் ஜெயித்திருப்பேன். பா. ஜ. க மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து நான் விலக வேண்டும் என்று கனிமொழி கூறியிருக்கிறார். ஒருவேளை அவர் பா. ஜ. க-வுக்கு வருகிறாரென்றால் அதை நான் பரிசீலனை செய்கிறேன் என்று கூறினார்.