பாமக மாவட்ட நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்

65பார்த்தது
பாமக மாவட்ட நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்
பாமகவின் வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் சரவணன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக பாமக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில்,
சென்னை புரசைவாக்கம் தாண்டவம் தெருவை சேர்ந்த பாமகவின் வடசென்னை மேற்கு மாவட்டத் தலைவர் சரவணன், கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

அதனால், ஜூன் 10-ம் தேதி முதல் அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஒப்புதலுடன் நீக்கப்படுகிறார். கட்சியினர் அவருடன் எவ்வகையிலும் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாமகவில் இருந்து நீக்கப்பட்ட சரவணனின் மனைவி உட்பட 6 பேர் கஞ்சா வழக்கில் கடந்த 9-ம் தேதி கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி