இளநிலை மருத்துவம்: ஆன்லைன் பதிவு நாளை தொடக்கம்

52பார்த்தது
இளநிலை மருத்துவம்: ஆன்லைன் பதிவு நாளை தொடக்கம்
2024 – 25ம் கல்வி ஆண்டிற்கான இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நாளை தொடங்குகிறது. நாளை காலை 10 மணி முதல் ஆகஸ்டு 8ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என மருத்துவ கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வு ஆகஸ்ட் 14-லும், மாநில ஒதுக்கீட்டு கலந்தாய்வு ஆகஸ்ட் 21-ம் தேதியும் தொடங்குகிறது. ஆகஸ்ட் 2-வது வாரத்தில் தரவரிசைப் பட்டியலை மருத்துவ கல்வி இயக்குனரகம் வெளியிட இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி