இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே போர்: உதவி எண்கள் அறிவிப்பு

277பார்த்தது
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே போர்: உதவி எண்கள் அறிவிப்பு
சென்னை: இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே கடுமையான போர் நிலவி வருவதால், அங்குள்ள தமிழர்களை தொடர்பு கொள்ள தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கு இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில் தான் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 1000-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலில் போர் சூழல் நிலவுவதால், அங்குள்ள தமிழர்கள் தமிழ்நாடு அரசைத் தொடர்பு கொள்ள +91-87602 48625, +91-99402 56444, +91-96000 23645 உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி nrtchennai@tn. gov. in, nrtchennai@gmail. com என்ற இணையதளங்களின் வாயிலாகவும், மின்னஞ்சல் வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி