சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு

74பார்த்தது
சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட இடங்களில் கடந்த சில நாட்களாக கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பொதுவாக ஓரிரு இடங்களில் மழை பெய்தது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. வெப்பநிலையைப் பொறுத்த வரை அதிகபட்சமாக மதுரை, பாளைங்யகோட்டை பகுதியில் 39. 4 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்சமாக ஈரோட்டில் 19. 8 டிகிரி செல்சியஸும் வெப்பம் பதிவாகியுள்ளது. செப்டம்பர் 30ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னதுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர் தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலையை பொறுத்த வரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி