சென்னையில் யூடியூப் சேனல் பயிற்சி..!

53பார்த்தது
சென்னையில் யூடியூப் சேனல் பயிற்சி..!
சென்னை: தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவன இயக்குநர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில் யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தை சந்தைப்படுத்தல் குறித்த பயிற்சி வரும் 9. 1. 2024 முதல் 11. 1. 2024 தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் யூடியூப் சேனலை உருவாக்குவது எப்படி, வீடியோ மற்றும் ஸ்லைடு ஷோ உருவாக்கம், சமூக ஊடக சந்தைப்படுத்தல், சமூக ஊடகங்களை இணைத்தல், வாடிக்கையாளர் நெட்வொர்க்கை எவ்வாறு அதிகரிப்பது, பயனுள்ள சந்தைப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்பு – ஆன்லைன் மார்க்கெட்டிங் – டொமைன் பெயர் மற்றும் ஹோஸ்டிங் – இணையதள வடிவமைப்பு நுட்பங்கள், விதிகள் ஆகியவற்றை விரிவாக விளக்கிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www. editn. in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி