நாளை போக்குவரத்து மாற்றம்: அதிகாரிகள் தகவல்

67பார்த்தது
நாளை போக்குவரத்து மாற்றம்: அதிகாரிகள் தகவல்
ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி காரணமாக அண்ணாநகரில் நாளை காலை 6 மணி முதல் 9 மணி நரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை பெருநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அண்ணாநகர் 2வது நிழற்சாலையில் நாளை ‘ஹாப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனால் 2வது நிழற்சாலையில் புளூஸ்டார் சந்திப்பு முதல் 2வது நிழற்சாலை மற்றும் 3வது பிரதான சாலை சந்திப்பு வரை காலை 6 மணி முதல் 9 மணி வரை போக்குவரத்து முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
* திருமங்கலத்திலிருந்து அண்ணாநகர் ரவுண்டானா சிந்தாமணி நோக்கி செல்லும் வாகனங்கள் புளூ ஸ்டார் சந்திப்பில் 5வது நிழற்சாலையில் இடதுபுறம் திரும்பி, 6வது நிழற்சாலை, ரவுண்டானாவை அடைந்து சிந்தாமணி, ரவுண்டானாவுக்கு செல்ல வேண்டும்.
* திருமங்கலத்தில் இருந்து அமைந்தகரை, ஈவெரா சாலை நோக்கி செல்லும் வாகனங்கள், புளூ ஸ்டார் சந்திப்பில் 5வது நிழற்சாலையில் வலதுபுறம் திரும்பி, 4வது நிழற்சாலையை அடைந்து அமைந்தகரை பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு செல்ல வேண்டும்.
* அண்ணாநகர் ரவுண்டானாவிலிருந்து திருமங்கலம் நோக்கி செல்லும் வாகனங்கள் 2வது நிழற்சாலையில் நல்லி சில்க்ஸ் அருகே 3வது பிரதான சாலையில் இடதுபுறம் திரும்பி, 4வது நிழற்சாலை வழியாக திருமங்கலம், முகப்பேர் செல்ல வேண்டும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி