சென்னை: ரூ. 2,152 கோடி கல்வி நிதி.. பிரதமருக்கு முதல்வர் கடிதம்

54பார்த்தது
சென்னை: ரூ. 2,152 கோடி கல்வி நிதி.. பிரதமருக்கு முதல்வர் கடிதம்
தமிழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி, 'சமக்ர சிக்ஷா' திட்டத்தின்கீழ் ரூ. 2,152 கோடி நிதியினை உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின், தேசிய கல்விக் கொள்கை-2020-ஐ முழுமையாக அமல்படுத்தி, முன்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை, தமிழ்நாட்டிற்கான 'சமக்ர சிக்ஷா' (Samagra Shiksha) திட்டத்தின்கீழ் நிதி விடுவிக்கப்பட மாட்டாது என்று ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் சமீபத்தில் தெரிவித்திருப்பது ஆழ்ந்த கவலை அளிக்கிறது. 

இது தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெருத்த கவலையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கு நிதி விடுவிக்கப்படாமல் உள்ளதால் ஏற்பட்டுள்ள வருந்தத்தக்க சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, தேசிய கல்விக் கொள்கை-2020-ஐ செயல்படுத்துவதோடு 'சமக்ர சிக்ஷா' திட்டத்தைப் பொருத்திப் பார்க்காமல், 2024-25 ஆம் நிதியாண்டில் இந்தத் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய ரூ. 2,152 கோடி நிதியினை உடனடியாக விடுவிக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இப்பொருண்மையின் தீவிரத்தை உணர்ந்து, தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி